Monday, August 31, 2026
Homeசெய்திகள்ஆதவ் அர்ஜுனா மீது கடும் கோபத்தில் பாஜக.. சட்டசபையில் விட்ட அந்த வார்த்தை!

ஆதவ் அர்ஜுனா மீது கடும் கோபத்தில் பாஜக.. சட்டசபையில் விட்ட அந்த வார்த்தை!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எந்த சம்பந்தமுமில்லாமல் கோத்ரா கலவரம் குறித்து பேசி, “கோத்ரா கலவரம் நடக்கும் போது இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்ட போது என்ன குரல்கொடுத்தீர்கள் நீங்க? இஸ்லாமியர்கள் உயிர் தான் முக்கியம் என்று சொல்லி ஏன் ராஜினாமா செய்யவில்லை என்றும், இந்த பாவத்தை, வரலாற்றை மறைக்க முடியாது” என திமுக வை விமர்சிக்கிறார். அவர் திமுகவை விமர்சிப்பது குறித்து நமக்கு கவலையில்லை. ஆனால் உண்மைக்கு புறம்பாக, வரலாறை திரித்து பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என பாஜக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

பாஜக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறுகையில், “த வெ க அரசின் அமைச்சர்களின் முறையற்ற, முதிர்ச்சியற்ற, சிறுபிள்ளைத்தனமான பேச்சுக்கள், அறிக்கைகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும், இது நாள் வரை நாம் பொறுமையாக தாங்கிக் கொண்டிருந்ததற்கு காரணம், போனால் போகிறது இப்போது தானே அரசியலுக்கு வந்திருக்கிறார்கள் என்பதனால் தான்.

ஆனால், நேற்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எந்த சம்பந்தமுமில்லாமல் கோத்ரா கலவரம் குறித்து பேசி, “கோத்ரா கலவரம் நடக்கும் போது இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்ட போது என்ன குரல்கொடுத்தீர்கள் நீங்க? இஸ்லாமியர்கள் உயிர் தான் முக்கியம் என்று சொல்லி ஏன் ராஜினாமா செய்யவில்லை என்றும், இந்த பாவத்தை, வரலாற்றை மறைக்க முடியாது” என திமுக வை விமர்சிக்கிறார். அவர் திமுகவை விமர்சிப்பது குறித்து நமக்கு கவலையில்லை. ஆனால் உண்மைக்கு புறம்பாக, வரலாறை திரித்து பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கோத்ராவில் பிப்ரவரி 27,2002 அன்று சபர்மதி விரைவு வண்டியில் S-6 பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தவர்களில் 59 பேரை உயிரோடு தீ வைத்து கொளுத்தி கொன்றது இஸ்லாமியர்கள் தான். அந்த 59 பேரும் ஹிந்துக்கள் தான். அயோத்திக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தவர்களில் 27 பெண்கள், 10 குழந்தைகளும் அடங்குவர். அந்த வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் 33 பேரும் இஸ்லாமியர்கள் தான் என்பது தான் வரலாறு. மேலும், அந்த படுகொலை சம்பவம் எவ்வாறு திட்டமிடப்பட்டது என்பதை நீதிமன்றம் தெளிவாக சொல்கிறது.

“*பெரும் கும்பல் ஒன்று ரயிலின் கற்கள் மற்றும் ஆயுதங்களை வீசியது.

*ரயில் நிறுத்தப்பட்டு S-6 பெட்டியில் இருந்தவர்கள் தப்பித்து செல்லாதவாறு தடுக்கப்பட்டனர்.

*ஏற்கனவே கொண்டு வரப்பட்ட ஏறக்குறைய 140 லிட்டர் பெட்ரோல் S-6 ரயில் பெட்டியின் மீது வீசப்பட்டு கொளுத்தப்பட்டது.

*இந்த சம்பவம் நடைபெற்ற முதல் நாள் இரவு அமான் கெஸ்ட் ஹவுசில் சதித்திட்டம் தீட்டப்பட்டது.

*இவை அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாலேயே செய்யப்பட்டது.” என நீதிமன்றம் தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

என்பதை ஆதவ் அர்ஜுனா உணர வேண்டும். வரலாறு தெரியாமல் உளறிக்கொட்டுவது த வெ க வின் வழக்கமாகி விட்டபோதிலும், அமைச்சரான பின்னர் பொறுப்போடு பேசுவது தான் அழகு. கோத்ரா விவகாரத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி மதரீதியாக பதட்டத்தை உண்டு செய்து, சிறுபான்மையினரை தாஜா செய்ய வேண்டும் என்பதற்காக ஹிந்துக்களுக்கு எதிராக பேசியதற்கு ஆதவ் அர்ஜுனா மக்களிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும்.

இனியாவது முதலமைச்சர் விஜய் அவர்கள் தன் அமைச்சர்களை விவரத்தோடு, பொறுப்போடு, உரிய தரவுகளோடு பேச வேண்டும் என உத்தரவிட வேண்டும். மேலும், தவறான தரவுகளை பதிவிட்ட ஆதவ் அர்ஜுனாவை சபாநாயகர் ஜேசிபி பிரபாகர் அவர்கள் கண்டிப்பதோடு அவரின் தவறான பேச்சுக்களை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்” இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments