Tuesday, March 3, 2026
HomeUncategorizedபிரம்மஹத்தி தோஷமும், பரிகாரமும்!

பிரம்மஹத்தி தோஷமும், பரிகாரமும்!

பிரம்மஹத்தி தோஷம் என்பது ஜாதக ரீதியாக குரு, சனி சேர்க்கையினால் வருவது. பலருக்கு இந்த தோஷத்தினால் வாழ்க்கையில் கடும் துயரங்கள் ஏற்படும். எந்த வகையிலும் முன்னேற்றம் இல்லாமல் இருப்பர். பிரம்மஹத்தி தோஷத்திற்கு சிறந்த பரிகார ஸ்தலம் கும்பகோணம் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயமாகும்.

நவ அம்சத்திலும் இணைந்து இருந்தாலும், இது பொருந்தும். ஏதோ ஒரு காரணத்தால் ஒருவரை கொலை செய்து விடுவதால், ஒருவருக்கு இந்த தோஷம் ஏற்படுகிறது. கொலை அல்லது அதற்கு சமமான பாவங்கள்.

பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறேன் என வாக்கு கொடுத்து, அவளை அனுபவித்து, திருமணம் செய்யாமல் இருத்தல்! பலரின் உழைப்பை உறிஞ்சி, அதற்க்குரிய சம்பளம் தராமல் இருப்பது,

குருவுக்கு தட்சிணை தராமல் இருப்பது, குருவின் கொள்கை பிடிக்காமல் தானே குருவாக மாறுவது, வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பைக் கொன்றுவிடுவது. சென்ற பிறவிகளில், ஆலயத்தை தகர்த்தல், சாமி சிலையை திருடுதல், உங்கள் மீது தனக்கிருக்கும் ஆசையை வெளிப்படுத்தியும், அந்த ஆசையை நிறைவேற்றாமலிருப்பது.

பரிகாரம்:

கும்பகோணம் அருகில் இருக்கும் திருவிடைமருதூர் கோவிலுக்குச் சென்று, பிரம்மஹத்தி தோஷ நிவாரணம் செய்து, ஒரு வாசல் வழியே நுழைந்து வேறொரு வாசல் வழியே வெளியேறுதல். அங்கே அதற்குரிய யாகம் நடத்துதல். இதுவே மிகவும் சிறந்த பரிகாரமாகும். இதனை செய்தால் 6 மாதத்திற்குள் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments