Tuesday, March 24, 2026
Homeசெய்திகள்திவாலாகும் நிலையில் Byju’s?

திவாலாகும் நிலையில் Byju’s?

இந்தியாவின் மிக மதிப்புமிக்க ஸ்டார்ட்-அப் நிறுவனமாக ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த ‘பைஜூஸ்’ (Byju’s), 22 பில்லியன் டாலர் மதிப்பிலிருந்து தற்போது திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது ஸ்டார்ட்-அப் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதீத விரிவாக்கம், முதலீட்டாளர்களுடனான மோதல், சரியான நேரத்தில் தணிக்கை அறிக்கைகளைத் தாக்கல் செய்யாதது மற்றும் கடன் சிக்கல்கள் எனப் பல காரணங்களால் இந்த வீழ்ச்சி நிகழ்ந்துள்ளது.

சுமார் 1.8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலிருந்த இந்த எட்டெக் (Edtech) நிறுவனம், தற்போது இந்திய மற்றும் அமெரிக்க நீதிமன்றங்களில் திவால் நடைமுறைகளை எதிர்கொண்டு வருவதுடன், அதன் நிறுவனர் பைஜூ ரவீந்திரன் தனது நிறுவனத்தின் நிகர மதிப்பு தற்போது ‘பூஜ்ஜியம்’ என்று குறிப்பிடும் அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments