திருவண்ணாமலை, ஆரணியில் பாலாஜி பவன் என்ற சைவ உணவகத்தில் சாப்பாட்டுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டிருந்தது. உணவகத்திலிருந்து அனுப்பப்பட்ட சாப்பாட்டில் பீட்ரூட் பொரியலில் எலித் தலை இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து உணவகத்தில் முறையிட்ட போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த உணவை உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கொடுத்து, பரிசோதனை செய்ய கேட்டுக் கொண்டனர்.

