எட்டு மாதங்கள் முன் பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்றார் சந்திரபாடு நாயுடு!! அவரை சந்தித்து தன் ஆதரவை தெரிவிப்பதுதான் திட்டம்!! கடைசி வரை பிரதமரை சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் கிடைக்கவில்லை! ஏமாற்றுத்துடன் திரும்பினார். 73 வயது!அரசியல் பின்னடைவுகள் தோல்வி அதனால் கிடைத்த அவமானங்கள்,புறக்கணிப்புகள்!
கடைசி நேரத்தில் கூட சிறை! இன்று முதல்வர்!ஒரு நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுக்கப்போகும் அளவுக்கு முக்கியமானவர். தற்போது இவரின் வருகைக்காக டெல்லி பிரதமர் அலுவலகம் காத்துக்கொண்டு இருக்கிறது. எந்த பிரதமர் சந்திக்காமல் புறக்கணித்தாரோ இன்று காலையில் அவர் வலிய போனில் பேசுகிறார்.
கர்நாடக முதல்வர் பேசுகிறார்,தேசியவாத காங்கிரஸ் தலைவர் பேசுகிறார். காலம் எப்போதும் ஒருவருக்கானதல்ல! எல்லோருக்குமானது!
