Home செய்திகள் அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் அமைச்சர் கனவுக்கு முடிவுக்கட்டா?

அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் அமைச்சர் கனவுக்கு முடிவுக்கட்டா?

தமிழக சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையான 234 இல், சட்டப்படியான 15 சதவீத வரம்பின்படி அமைச்சரவையின் அதிகபட்ச பலம் 35 அமைச்சர்கள் வரை இருக்கலாம் என்ற சூழலில், தற்போதைய புதிய அமைச்சரவை விரிவாக்கம் மிக முக்கிய அரசியல் நகர்வுகளை வெளிப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே முதற்கட்டமாகப் பதவியேற்ற 10 அமைச்சர்களுடன், இன்று புதிய அமைச்சர்களாகப் பதவியேற்கும் 23 பேரையும் சேர்த்தால் மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்கிறது; இதன் மூலம் இன்னும் இரண்டு இடங்கள் மட்டுமே காலியாக உள்ள நிலையில், அவை தற்போதைய கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (இயூமுலீ) ஆகிய கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

அமைச்சரவையின் இந்தத் துல்லியமான இலக்கு மற்றும் இட ஒதுக்கீடு, சட்டமன்ற நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கொறடா உத்தரவை மீறி, தற்போதைய முதலமைச்சருக்கு ஆதரவாக வாக்களித்து அமைச்சராகலாம் என்ற கனவோடு இருந்த ‘அதிமுக அதிருப்தி’ எம்.எல்.ஏ-க்களின் மந்திரி ஆசைக்கு முற்றிலும் முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது.

கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து, அதே நேரத்தில் அதிருப்தியாளர்களின் பேரம் பேசும் சக்தியை முடக்கும் வகையில் இந்த அமைச்சரவை பலம் மிகச் சாதுரியமாகத் திட்டமிடப்பட்டுள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Exit mobile version