சென்னை–அரசு கேபிள் ‘டிவி’ சேவைகள் பாதிப்புக்கு காரணமான தனியார் நிறுவனத்தின் மீது, சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக, அரசு கேபிள் ‘டிவி’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனத்தின் அறிவிப்பு:
அரசு கேபிள் ‘டிவி’ நிறுவனத்திற்கு, ‘சாப்ட்வேர்’ சேவைகளை வழங்கி வந்த தனியார் நிறுவனத்தின் சேவை திடீரென தடைபட்டது. இதனால், அரசு கேபிள் நிறுவனத்தின் சேவைகள், பல பகுதிகளில் உள்ள செட் டாப் பாக்ஸ்களில் கிடைக்காமல் தடங்கல் ஏற்பட்டது.
பாதிப்புகளை உடனடியாக சரி செய்ய, தொழில்நுட்ப குழு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. அதிகபட்சம் இன்னும், 24 மணிநேரத்தில் தொழிற்நுட்ப கோளாறுகள் முழுமையாக சரி செய்யப்படும்.
அரசு கேபிள், ‘டிவி’ நிறுவனத்திற்கு, கேபிள் ஆப்பரேட்டர்கள், பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். பிரச்னைக்கு காரணமான தனியார் நிறுவனத்தின் மீது, சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
