Home Uncategorized செல்போன் கட்டண உயர்வுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்

செல்போன் கட்டண உயர்வுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்

ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் நிறுவனங்களின் செல்போன் கட்டண உயர்வுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்.

செல்போன் கட்டண உயர்வு விவகாரத்தில் அரசு தனது கடமையை செய்யத் தவறிவிட்டது. 

இதன்மூலம் செல்போன் நிறுவனங்களுக்கு சாதகமாக மோடி அரசு செயல்பட்டுள்ளது தெரிகிறது – ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, காங்கிரஸ் பொதுச் செயலாளர்.

எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் 3 செல்போன் நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதித்தது எப்படி?

நாட்டில் 92% சேவை வழங்கும் 3 நிறுவனங்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதித்தது எப்படி?

3 நிறுவனங்களும் 48 மணி நேரத்திற்குள் ஒரே மாதிரியாக கட்டண உயர்வை அறிவித்தது எப்படி?

ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் நிறுவனங்களின் முதலீடு, வருமானம், சேவை அளவு ஆகியவற்றில் மாறுபாடு உள்ளது. 

ஆனால், கட்டண உயர்வை மட்டும் 3 நிறுவனங்களும் 15% முதல் 20% வரை உயர்த்தி ஒரே மாதிரி அறிவித்தது எப்படி? -ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, காங். பொதுச் செயலாளர்

Exit mobile version