Wednesday, March 11, 2026
HomeUncategorizedசெம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் பிறந்த நாளின்று

செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் பிறந்த நாளின்று

தஞ்சாவூர் டிஸ்ட்ரில் செம்மங்குடி அருகே திருக்கொடிக்காவல் கிராமத்தில் ரொம்பப் பிரபலமான இசைக் குடும்பத்தில் பிறந்த சீனிவாச ஐயர், கர்நாடக இசையுலகின் பீஷ்ம பிதாமகனாகக் கருதப்பட்டவர். 1948ம் ஆண்டில் மியூசிக் அகாடெமியின் சங்கீத கலாநிதி பட்டத்தைப் பெற்றார்.

இளம் வயசிலே அந்தப் பட்டம் பெற்ற முதல் நபர் செம்மங்குடி தான். மத்திய அரசின் பத்மபூஷன் உள்பட நாட்டின் மிக உயரிய இசைவிருதுகளைப் பெற்றவர். மறைந்த திருவாங்கூர் மகாராஜா சுவாதித் திருநாள் எழுதிய கீர்த்தனைகளுக்கு இசை வடிவம் தந்தவர் சீனிவாசஐயர் தான்.

திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான கலைஞராக இருந்தவர். திருப்பதி கோவிலின் ஆஸ்தான கலைஞராகவும் இருந்த செம்மங்குடி. சங்கீத கலாபூஷன் உள்ளிட்ட பல்வேறுவிருதுகளைப் பெற்றுள்ளார். சென்னை இசைக் கல்லூரியின் முதல்வர், திருவனந்தபுரம் சுவாதித் திருநாள் இசைக் கல்லூரியின் முதல்வர்,சென்னை வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் என பல்வேறு நிலைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர். தென்இந்தியாவின் இசை அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்தவர்.

தனது மாமாவான வயலின் இசைத் கலைஞர் கிருஷ்ண ஐயரிடமும், தனது உறவினரான நாராயணசாமி ஐயரிடமும்8 வயதிலேயே இசை பயில ஆரம்பித்தார். பின்னர் கும்பகோணத்தில் கொட்டுவடம் சகராம ராவின் குருகுலத்தில்இசை பயின்றார்.

அவர் தான் செம்மங்குடியை மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரிடம் அறிமுகப்படுத்தி வைத்து இசைகற்க வைத்தார். ராகங்களைக் கையாள்வதில் விற்பன்னராகத் திகழ்ந்த சீனிவாச ஐயர் இசையில் கலப்படத்தை அறவே வெறுத்தவர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments