சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்கள் தவறான தகவல்களை ஊடகங்களுக்கும் பொது மக்களுக்கும் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சிலைகள் கடல் நீரில் போடவும் இல்லை. விநாயகர் சிலைகளை கரைக்கு கொண்டு வரவுமில்லை. அனைத்து சிலைகளும் கடல் நீரில் போடாமல் கரையிலேயே வைக்கப்பட்டது. இரவு எப்படி விநாயகர் சிலை வைக்கப்பட்டதோ? அதைத்தான் காலையில் சென்று ஆய்வு செய்து தவறான தகவலை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறுகிறார்.
சென்னை பட்டினம் பாக்கம் கடற்கரையில் கரையாத விநாயகர் சிலைகள் குப்பைமேடாக காட்சியளிக்கிறது என்று சொல்வது முற்றிலும் தவறு. நேற்று இரவு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் முடிந்து சென்னை பட்டினம் பாக்கத்தில் விநாயகர் திருமேனிகள் விசர்ஜனம் செய்வதற்கு கொண்டு சென்ற பொழுது அங்கே இருந்த இயந்திரம் கொண்ட மின் தூக்கியால் விநாயகர் சிலைகள் அனைத்தும் கடல் நீரில் தான் வைக்க வேண்டும்.
அதற்கு மாறாக நேற்று இரவு அனைத்து விநாயகர் சிலைகளும் கடல் நீரில் அல்லாமல் கடற்கரையிலேயே வைக்கப்பட்டது. இதன் ஆதாரமாக வீடியோவும் எங்களிடத்தில் உண்டு. தகவலை முழுமையாக ஆய்வு செய்யாமல் விநாயகர் சதுர்த்தி சிலைகள் அனைத்தும் ரசாயனத்தால் செய்யப்பட்டது.
அதனால், தான் கடல் நீர் பச்சையாக இருப்பதைப் போன்று ஒரு செய்தியை சென்னை மாநகராட்சி ஆணையாக திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியிருப்பது முற்றிலும் தவறான தகவல். நேற்று இரவு அவர் ஆய்வு செய்து இருந்தால் உண்மை தெளிவை பட்டு இருக்கும்.
அங்கு இருந்த காவல் துறை உயரதிகாரிகளிடம் கேட்டறிந்து மக்களிடத்திலே செய்தியாக வெளியிட்டிருக்கலாம். அதன் மாறாக தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி விழாவை மட்டும் சீர்குலைக்கும் நோக்கத்தில் இந்த பேட்டியின் பதிவு காணப்படுகிறது.
விநாயகர் திருமேனியை கடல் நீரில் வைக்க வேண்டும் என்று அங்கு கூறுகிறார். தரையில் தான் வைக்க முடியும் என்று ஜேசிபி இயந்திரத்தை இயக்கு பவரும் கூறுகிறார். வீடியோ ஆதாரம் உங்களிடத்தில் சமர்ப்பணம
