Home Uncategorized செயல் அலுவலரை அவமதிப்பு செய்த சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி மற்றும் திமுக மாவட்ட துணைச் செயலாளர்

செயல் அலுவலரை அவமதிப்பு செய்த சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி மற்றும் திமுக மாவட்ட துணைச் செயலாளர்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சி அலுவலகத்திற்கு நேற்றைய தினம் ஆய்வு செய்ய வந்த சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி மற்றும் திமுக மாவட்ட துணைச் செயலாளர் செங்கை மாறன் ஆகியோர் அலுவலகத்தில் செயல் அலுவலர் திருமதி சந்திரகலா அவர்களை நிற்கவைத்து அவருடைய நாற்காலியில் சட்டமன்ற உறுப்பினர் அமர்ந்து செயல் அலுவலரை நிற்கவைத்து அரை மணி நேரமாக  உள்ளே அமர்ந்துள்ளனர். இந்த செயல் அங்குள்ள பணியாளர்கள்  மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுபோன்று மானாமதுரை சட்டமன்ற தொகுதி முழுவதும் அரசு அலுவலகங்களில் திமுகவினரின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளதாகவும் பணியாற்றும் அரசு ஊழியர்கள் பணி மாற்றம் பெற்று செல்ல முயற்சி செய்து வருகிறார்கள். இதுதொடர்பாக தமிழக முதல்வர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் வேண்டுகிறார்கள்

Exit mobile version