செயற்கை நுண்ணறிவு(AI) ஆராய்ச்சியில் உலகளவில் வெறும் 1.4% பங்களிப்புடன் மிகவும் பின்தங்கியுள்ள இந்தியா!
நாட்டில் மிகப்பெரிய தொழில்நுட்ப திறன்கள் கொண்டு இருந்தாலும், AI ஆராய்ச்சியில் அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளை விட இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது
உலகின் முதல் 10 AI ஆராய்ச்சி மாநாடுகளில் இந்தியாவின் காகித பங்களிப்பு(Research Papers) வெறும் 1.4 சதவீதத்துடன் (2018-2023) 14-வது இடத்தில் உள்ளதாக, Change Engine ஆய்வமைப்பு தெரிவித்துள்ளது
AI ஆராய்ச்சியில் அமெரிக்காவும் சீனாவும் முறையே 30.4% மற்றும் 22.8% பங்குகளுடன் முதல் இரு இடங்களில் உள்ளன
அடுத்த 5 ஆண்டுகளில் AI ஆராய்ச்சியில் இந்தியா 5% உலகளாவிய பங்கைப் பெற, தற்போதைய AI ஆராய்ச்சியை 40% வரை அதிகரிக்க வேண்டும் என்று Change Engine ஆய்வமைப்பு கூறியுள்ளது

