Home Uncategorized சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக்கூடாதா? – இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்

சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக்கூடாதா? – இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்

இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகை ரக்ஷிதா மஹாலஷ்மி, அபி நட்சத்ரா, மற்றும் ஆனந்த் நாக், அம்ரிதா ஷெல்டர், சிவம் நடிப்பில், சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள படம் எக்ஸ்டிரீம். இம்மாதம் 20 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாகோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவில் பேசிய இயக்குநர் ஆர் வி உதயகுமார், ” எக்ஸ்டிரீம் இந்தப்படம் பற்றி எந்த ஒரு விசயமும் தெரியாமல்தான் கலந்துகொண்டேன். டிரெய்லர் பார்த்த போது, நாம் நினைக்காத விசயத்தை எல்லாம் செய்கிறார்களே என மகிழ்ச்சியாக உள்ளது.

டைட்டிலே வித்தியாசமாக உள்ளது. தன் கணவரின் ஆசைக்குப் பின்புலமாக இருந்து படத்தைத் தயாரித்திருக்கும், தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துக்கள். எப்போதும் வெளியிலிருந்து, சினிமாக்காரர்களை கலாய்ப்பார்கள் ஆனால் நிஜத்தில் சினிமாக்காரர்களைவிடக் கேவலமானவர்கள் இங்கு இருக்கிறார்கள்.

சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு. விஜய் இப்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார் அதற்குள் அவரை கட்டம் கட்டி விமர்சிக்கிறார்கள். அவர் முதலில் அரசியல் செய்யட்டும் பின் விமர்சிக்கலாம்” என்றார்.

Exit mobile version