ரயிலில் துணி உறையுடன் கம்பளி போர்வை வழங்கும் திட்டம் முதன் முதலாக மதுரையில் அறிமுகம்
ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இரண்டு படுக்கை விரிப்புகள், தலையணை, தலையணை உறை, கம்பளிப் போர்வை, கைத்துண்டு ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
இதில் கம்பளி போர்வை, தலையணை தவிர மற்ற படுக்கை துணிகள் ஒவ்வொரு உபயோகத்திற்கு பிறகும் சலவை செய்து தூய்மையாக வழங்கப் படுகிறது.
கம்பளி போர்வை மட்டும் 15 அல்லது 30 நாட்களுக்கு ஒரு முறை உலர் சலவை செய்யப்படுகிறது.
இந்த உலர் சலவை சம்பந்தமாக பயணிகள் பல்வேறு கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவித்து வந்தனர்.
பயணிகளுக்கு தூய்மையான, சுகாதாரமான கம்பளிப் போர்வை வழங்குவதற்கு தெற்கு ரயில்வேயில் முதன்முறையாக மதுரை கோட்டத்தில்
கம்பளி போர்வைகள் தனித்தனி துணி உறைகளோடு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) முதல் பாண்டியன் எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்த புதிய வசதி பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் தொடர்ந்து செயல்படுத்தப்பட இருக்கிறது.
இந்த துணி உறைகளில் கம்பளி போர்வை உள்ளிட்டப்பட்டு வெல்கிரோ ஒட்டி வெளியே வராமல் பாதுகாக்கப் படுகிறது.
