Wednesday, March 4, 2026
HomeUncategorizedசமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் சிலிண்டர் விலை 875 ரூபாய் 50 காசாக அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே கடந்த ஜூலை ஒன்றாம் தேதி 25 ரூபாய் விலை உயர்த்தப்பட்டது. கடந்த ஒன்றரை மாதத்திற்கு பின் எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் விலையை உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு நாட்டு மக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, கொரோனாவால் மக்கள் வருவாய் இன்றி, தங்களின் வாழ்வாதாரம் இழந்துபாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில்,இந்த விலை உயர்வு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என கூறப்படுகிறது.

கடந்த 13ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டதால், தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments