Home Uncategorized சங்கர் ஜிவால் மற்றும் ககன்தீப் சிங் பேடி புரசைவாக்கத்தில் ஆய்வு

சங்கர் ஜிவால் மற்றும் ககன்தீப் சிங் பேடி புரசைவாக்கத்தில் ஆய்வு

சென்னை பெருநகர ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப, மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆப, ஆகியோர் நேற்று (23.10.2021) மாலை புரசைவாக்கம் பகுதிக்கு சென்ற கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பொதுமக்கள்

கடைபிடிக்கின்றனரா என ஆய்வு செய்தனர். அங்குள்ள கடைகளின்

உரிமையாளர்களிடமும், பொதுமக்களிடமும் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து, முகக்கவசங்களை வழங்கினர். மனித உயிர்களை காப்பாற்ற

தமிழக அரசு மேற்கொண்டுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளான

முகக்கவசம் அணிதலையும், சமூக இடைவெளி கடைபிடித்தலையும், திரவ

சுத்திகரிப்பான் கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்தலையும், கட்டாயம்

பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் எனவும், மருத்துவர்களின் பரிந்துரைப்படி

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் வலியுறுத்தினர்.

பின்னர் பாண்டிபஜார் மற்றும் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதிகளுக்கு

சென்று ஆய்வு செய்து, கொரேனா தடுக்கும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்து,

முகக்கவசம் கட்டாயம் அணிய வலியுறுத்தினர்.

Exit mobile version