காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கூடியது. இக்கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கியுள்ளார். ராகுல் காந்தி பங்கேற்றுள்ளார்.
காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள், நிரந்தர அழைப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்ளும் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரம், உள்கட்சி தேர்தல் நடத்துவது, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்கள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

