Thursday, March 5, 2026
HomeUncategorizedசொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற சுதாகரன் இன்று விடுதலை

சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற சுதாகரன் இன்று விடுதலை

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்தும், சுதாகரன் மட்டும் தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராத தொகையை செலுத்தவில்லை. இதனால் கோர்ட்டு உத்தரவுப்படி அவர் அபராதத் தொகையை செலுத்த தவறியதால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையை அனுபவித்தார்.

இந்த நிலையில் அவரது தண்டனை காலம் இன்றுடன் (சனிக்கிழமை) முடிவடைகிறது. இதையொட்டி அவர் இன்று காலையில் விடுதலை செய்யப்படுகிறார். அவர் ஏற்கனவே சிறையில் இருந்த நாட்களை கழிக்கப்பட்டதை அடுத்து அவர் சற்று முன்கூட்டியே விடுதலை ஆகிறார். அவரை வரவேற்று அழைத்து செல்ல அவரது குடும்பத்தினர் பெங்களூரு வந்துள்ளனர்.

சுதாகரன், மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments