Home Uncategorized சபரிமலையில் 20 நாட்களில் 1640 லோடு குப்பை அகற்றம்

சபரிமலையில் 20 நாட்களில் 1640 லோடு குப்பை அகற்றம்

சபரிமலையில் மண்டலகாலம் துவங்கி 20 நாட்களில் 1640 லோடு குப்பைகள் அகற்றப்பட்டது.

சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் தலைமையிலான சபரிமலை துப்புரவு சங்கத்தின் விஷூதி சேனா தொண்டர்கள், குப்பைகளை அகற்றி வருகின்றனர். , சன்னிதானத்தில் இருந்து தினமும் 35 லோடு குப்பைகள் அகற்றப்படுகின்றன.

தேவஸ்வம் வாரியம், அப்பாச்சிமேடு முதல் பாண்டிதாவளம் வரை ஐந்து டிராக்டர்களில் தினமும் குப்பைகளை சேகரித்து, மூன்று எரியூட்டிகளில் அப்புறப்படுத்தப்படுகிறது.

இதன் செயலாக்க திறன் ஒரு மணி நேரத்திற்கு 700 கிலோ ஆகும். பம்பையில் மூன்று டிராக்டர்களில் ஏழு முறை குப்பை சேகரிக்கப்படுகிறது. அப்பாச்சிமேடு மேட்டு முதல் சாளக்காயம் வரை தினமும் 21 லோடு குப்பைகள் தேவசம்போர்டு பம்பையில் உள்ள காடுகளில் அப்புறப்படுத்தப்படுகிறது. நிலக்கல்லில் தினமும் 24 லோடு கழிவுகள் பதப்படுத்தப்படுகின்றன.

சபரிமலை மற்றும் அதன் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்ய ஆயிரம் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சன்னிதானத்தில் மட்டும் 300 விஷூதி சேனா தொண்டர்கள் 210 பேரும், நிலக்கல் அடிவாரத்தில் 450 பேரும், பந்தளத்தில் 20 பேரும், குளநடையில் 10 பேரும் சேனையுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version