சபரிமலையில் நேற்று 87,216 பேர் மலை ஏறியுள்ளனர். இதில், 9,822 பேர் ஸ்பாட் புக்கிங் செய்தவர்கள். சன்னிதானம், பம்பை, நிலக்கல் போன்ற அனைத்து இடங்களிலும் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. பம்பையில் வாகனங்களை நிறுத்தும் வசதி உள்ளதாகவும், பக்தர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அப்பம், அரவணை கவுண்டர்கள் முன்பு பிரசாதம் வாங்க கூட்டம் அலைமோதுகிறது. செங்கன்னூர் ரயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது மரகூட்டம் பகுதியில் மூன்று இடங்களில் போலீசார் பக்தர்களை கட்டுப்படுத்தி அனுப்பி வருகின்றனர். ஒரே நேரத்தில் பலர் சன்னிதானம் வருவதை தடுக்கவே இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்….
