Home Uncategorized கிணற்றுக்குள் விழுந்த கார்.. பதறிய ஊர் மக்கள்!

கிணற்றுக்குள் விழுந்த கார்.. பதறிய ஊர் மக்கள்!

திருவண்ணாமலை அருகே கிளியாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால் (25). இவர் பட்டப்படிப்பை முடித்துவிட்டு திருவண்ணாமலை உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

 நேற்று காலை ஆடி அமாவாசையை முன்னிட்டு வள்ளிவாகை கிராமத்தில் உள்ள முருகன் கோவிலுக்கு காரில் சென்றுள்ளார்.  சாமி தரிசனம்  செய்த பிறகு வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்த பொழுது வன்னியர் நகர் பகுதி அருகே கோபால் தனது காரை இடது புறமாக திருப்பி உள்ளார்.

 அப்போது கட்டுப்பட்டு இருந்த கார் சாலையோரம்  இருந்த தண்ணீர் இல்லா கிணற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கார் ஓட்டிக் கொண்டு இருந்த கோபால் லேசான காயங்களுடன் காரில் சிக்கினார். அவரது அலறல் சத்தம் கேட்ட பிறகு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கயிறு கட்டி இழுத்து காரை மீட்டனர்.பத்திரமாக மீட்கப்பட்ட கோபாலை  சிகிச்சைக்காக திருவண்ணாமலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தண்ணீர் இல்லாத கிணற்றை மூட அங்குள்ள ஊர் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Exit mobile version