இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க ஆகஸ்ட் 15ஆம் தேதி ஏன் தேர்வு செய்யப்பட்டு நள்ளிரவில் வாங்கியது ஏன் தெரியுமா?
லாரி காலின்ஸ் மற்றும் டொமினிக் லாபியர் ஆகியோர் தங்கள் ‘Freedom at Midnight’ என்ற புத்தகத்தில் இது குறித்து விவரித்து உள்ளனர். ஆகஸ்ட் 15ஆம் தேதி மவுண்ட்பேட்டனுக்கு மிகவும் முக்கியமான ஒரு நாள் என புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர். இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியப் பேரரசு நிபந்தனையின்றி சரணடைவதாக அறிவித்த நாள் இது. மவுண்ட்பேட்டனை பொறுத்தவரை அவர் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள் , இது ஆசியாவின் புதிய ஜனநாயக நாட்டின் பிறப்புக்கு பொருத்தமாக இருக்கும் என அவர் கருதியதாக புத்தகத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.’Freedom at Midnight’ என்ற புத்தகத்தில் இந்த தேதி எப்படி அறிவிக்கப்பட்டது என்பது காலின்ஸ் மற்றும் லாபியர் ஆகியோர் இவ்வாறு விவரிக்கின்றனர்.
“மவுண்ட்பேட்டன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அதிகார பரிமாற்றத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்பதை அனைவரும் ஒப்புக் கொண்டால், நிச்சயமாக நீங்கள் ஒரு தேதியை மனதில் வைத்திருக்க வேண்டும்?” “என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டார்.
கூட்டம் நிறைந்த அந்த அறையில் ஒவ்வொரு முகமும் மவுண்ட்பேட்டனை நோக்கி திரும்பியது, அறையே அமைதியாக இருந்தது. மின் விசிறிகளின் இரைச்சல் மட்டுமே கேட்டது. அந்த இடத்தில் மவுண்ட்பேட்டன் மட்டுமே எஜமானராக இருந்தார். ஏனெனில் அவர் பதிலுக்காக தான் நாடே காத்திருந்தது.
“ஆம், அதிகார மாற்றத்திற்கான தேதியை நான் தேர்வு செய்துவிட்டேன்” என மவுண்ட்பேட்டன் பதில் அளித்தார். அவர் அந்த பதிலை கூறும் போது தன்னுடைய மனதில் எந்த தேதி என்பதை இன்னமும் அவர் முடிவு செய்தாகவில்லை என அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
மவுண்ட்பேட்டன் செப்டம்பர் தொடக்கத்தில், மத்தியில் அல்லது ஆகஸ்ட் மத்தியில் என யோசித்து கொண்டிருக்க , ஆகஸ்ட் மத்தியில் என்ற உடன் அவருக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. தன் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் ,ஆகஸ்ட் 15. இரண்டாம் உலகப் போரின் முடிவில் 1945 ஆகஸ்ட்15ஆம் தேதி தான் ஜப்பான் அரசு தாங்கள் சரணடைவதாக அறிவிப்பு வெளியிட்டது. அப்போது ஆங்கிலேயர்களின் கிழக்கு ஆசிய கமாண்டராக இருந்தவர் மவுண்ட்பேட்டன். எனவே தான் 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவில் அதிகார மாற்றம் நிகழும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த தேதியைத் தேர்ந்தெடுத்தது ஏன் என்பதை விளக்கிய மவுண்ட்பேட்டன், “நான் எதிர்பாராத வகையில் தான் இந்த தேதி எனக்கு தோன்றியது, ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் தான் இதைத் தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் அந்த இடத்தில் என்னுடைய பதில் மிக முக்கியமாக இருந்தது. அதிகார மாற்றத்திற்கான தேதியை நிர்ணயம் செய்துவீட்டிர்களா என செய்தியாளர்கள் கேட்டபோது, விரைவில் அதிகார மாற்றம் நிகழ வேண்டும் ஆனால் எந்த தேதி என்பதை சரியாக முடிவு செய்யவில்லை, ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன், பின்னர் தான் ஆகஸ்ட் 15 நினைவில் வந்தது, ஏனென்றால் இரண்டாம் உலக போரில் ஜப்பான் சரணடைவதாக அறிவித்ததன் இரண்டாவது ஆண்டு நினைவு தினம் ஆகஸ்ட் 15இல் வர இருந்தது. அதன் நினைவாகவே இந்த தேதியை தேர்வு செய்தேன் என கூறினார்.
மவுண்ட்பேட்டனின் இந்த அறிவிப்பை தொடர்ந்து இந்தியா சுதந்திர மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் 1947 ஜீலை 4ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு ஆட்சி மாற்றத்துக்கான பணிகள் நடைபெற்றன. இதன் படி ஆகஸ்ட் 15ஆம் தேதி நள்ளிரவில் இந்தியா சுதந்திர நாடாக மாறியது.
அதாவது மவுன்ட் பேட்டன் முடிவு செய்த ஆகஸ்ட் 15ஆம் தேதி உகந்த நாளாக இருக்காது என்று இந்திய சோதிடர்களும் சில தலைவர்களும் கருதினார்கள். அதனால், நள்ளிரவு 12 மணியிலிருந்து அடுத்த நாள் தொடங்குவதால் மவுன்ட் பேட்டனுக்கும் சோதிடர்களுக்கும் திருப்தியளிக்கும் வகையில் நள்ளிரவில் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.
ஆனால் அப்படி கிடைத்த சுதந்திர தினத்தை ஏழு அடுக்கு பாதுகாப்புடன் 78ஆம் ஆண்டு விழாவை கொண்டாடுவதுதான் கவலைக்குரிய விஷயம்

