Sunday, May 24, 2026
Homeசெய்திகள்"தம்பியுடையான் படைக்கு அஞ்சான்"-தேசிய சகோதரர்கள் தினம் இன்று!

“தம்பியுடையான் படைக்கு அஞ்சான்”-தேசிய சகோதரர்கள் தினம் இன்று!

இன்று தேசிய சகோதரர்கள் தினம்; சகோதரர்களுக்கு இடையே இருக்கும் பாசப்பிணைப்பு என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு ஆகச்சிறந்த உன்னதமான உறவாகும்.

ஒரு தாய் வயிற்றில் பிறந்து, சிறு வயதில் விளையாட்டுப் பொருட்கள் முதல் தின்பண்டங்கள் வரை எல்லாவற்றுக்கும் சின்னச் சின்ன சண்டைகள் போட்டுக் கொண்டாலும், காலங்கள் கடந்து தங்களுக்குள் ஒரு பிரச்சினை என்று வரும்போது அண்ணன் – தம்பி இருவரும் ஒருவருக்கொருவர் அரணாக நின்று தாங்கிப் பிடிக்கும் அந்தப் பாசம் தனித்துவமானது. ‘தம்பியுடையான் படைக்கு அஞ்சான்’ என்ற பழமொழிக்கு ஏற்ப, ஒரு சகோதரனின் பலமும் ஆதரவும் பக்கத்தில் இருந்தால் உலகையே வென்றுவிடலாம் என்ற அபாரமான நம்பிக்கை பிறந்துவிடுகிறது.

எத்தனையோ கருத்து வேறுபாடுகள் வந்தாலும், ஆபத்துக் காலத்தில் உடனே ஓடிவந்து உதவும் இந்த அற்புத உறவைக் கொண்டாடும் விதமாகவே, கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட இந்த தினம் (மே 24), இன்று உலகம் முழுவதும் உள்ள உடன்பிறப்புகளின் அன்பை வெளிப்படுத்தும் ஒரு உன்னதமான நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments