Thursday, September 24, 2026
Homeசெய்திகள்வங்கி வேலைநிறுத்தம் எதிரொலி: மத்திய அரசு ஊழியர்களுக்கு செப். 25-லேயே சம்பளம், ஓய்வூதியம்!

வங்கி வேலைநிறுத்தம் எதிரொலி: மத்திய அரசு ஊழியர்களுக்கு செப். 25-லேயே சம்பளம், ஓய்வூதியம்!

மத்திய அரசு ஊழியர்கள், பாதுகாப்புத் துறை (Defence), அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்குச் செப்டம்பர் மாதச் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் முன்கூட்டியே செப்டம்பர் 25-ஆம் தேதியே வழங்கப்படும் என மத்திய நிதி அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான UFBU வரும் செப்டம்பர் 28 முதல் 30 வரை நாடு தழுவிய அளவில் 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால், பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த முன்செலுத்தல் தொகை அட்வான்ஸ் தொகையாகக் கருதப்பட்டு, ஏதேனும் பிழைத் திருத்தங்கள் அல்லது மாறுதல்கள் இருப்பின் அவை அக்டோபர் மாதச் சம்பளத்தில் சரிசெய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காலாண்டின் கடைசி நாட்களில் பணப் பரிவர்த்தனைத் தடங்கல்களைத் தவிர்க்க ஏதுவாக மற்ற வங்கிக் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளையும் முன்கூட்டியே முடிக்குமாறு அனைத்துத் துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்க வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) அனைத்துப் பொதுத்துறை மற்றும் மண்டல கிராமப்புற வங்கிக் கிளைகளும் வழக்கம் போல் இயங்கும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments