Wednesday, August 12, 2026
Homeசெய்திகள்சென்னை மாநகரச் சாலைகளுக்கு அதிரடி மேம்பாடு: 471 பேருந்து சாலைகள் நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில்!

சென்னை மாநகரச் சாலைகளுக்கு அதிரடி மேம்பாடு: 471 பேருந்து சாலைகள் நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில்!

சென்னை மாநகரச் சாலைகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் (GCC) கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 387 கி.மீ நீளமுள்ள 471 பேருந்து சாலைகளைப் பராமரிக்கும் பொறுப்பைத் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை கையிலெடுக்கவுள்ளது.

சமீபத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் மாநகரச் சாலைகளின் சீரற்ற நிலை குறித்துத் தெரிவித்ததைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சென்னைச் சாலைகளைத் தரமாக மாற்ற விரிவான திட்டத்தை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன் கீழ், அண்ணா சாலை, அண்ணா நகர் 2 மற்றும் 3-வது அவென்யூக்கள், சிவானந்தா சாலை, தியாகராய சாலை, வெங்கடநாராயணா சாலை, ஜி.என்.செட்டி சாலை, ஓ.எம்.ஆர், ஈ.சி.ஆர், பூந்தமல்லி நெடுஞ்சாலை, என்னூர் விரைவுச்சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைகள் நெடுஞ்சாலைத் துறையின் பெரிய நிதியுதவியுடன் (₹21,000 கோடி பட்ஜெட்) மேம்படுத்தப்படவுள்ளன. இத்திட்டத்தின் மூலம் சாலைகள், மழைநீர் வடிகால்கள் மற்றும் கழிவுநீர் உள்கட்டமைப்புகள் அனைத்தும் தனித்தனியாக இல்லாமல் ஒருங்கிணைந்து திட்டமிடப்படும். மேலும், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் (Highways Research Station) மூலம் தார் தடிமன் மற்றும் சாலை மட்டம் தீவிரமாகப் பரிசோதிக்கப்படும்.

சாலை தோண்டும் பணிகளுக்கு 30 நாட்களுக்குள் அனுமதி அளிக்கும் ஆன்லைன் போர்டல் அறிமுகப்படுத்தப்பட்டு, தோண்டப்பட்ட சாலைகள் உடனுக்குடன் சீரமைக்கப்படும். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தைப் (NHAI) போலக் ஒப்பந்ததாரர்களுக்குக் குறுகிய மற்றும் நீண்டகாலப் பராமரிப்பு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு, தவறினால் அபராதம் விதிக்கும் கண்டிப்பான விதிமுறைகளும், மழைநீர் எளிதில் வடிந்து கால்வாய்களைச் சென்றடையும் புதிய வடிகால் அமைப்புகளும் ஏற்படுத்தப்படவுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments