நியுகோ என்ற தனியார் நிறுவனம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நகரங்களுக்கிடையே இன்டர்சிட்டி பேருந்து சேவையை இயக்கி வருகிறது. 100% மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை மட்டுமே இந்நிறுவனம் இயக்கி வருகிறது.
இந்த ஆண்டு இந்தியாவின் 76வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதை ஒட்டி, இந்நிறுவனம் ஆகஸ்டு 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை 1 ரூபாய்க்கு பேருந்து பயணம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது. அதன்படி 1 ரூபாய் மட்டுமே கட்டணமாக செலுத்தினால் போதும், சர்வீஸ் சார்ஜ் எதுவுமில்லாமல் பயண இருக்கையை புக் செய்து கொள்ளலாம்.
இந்த நிறுவனத்தின் பேருந்து சேவை சென்னை – திருப்பதி, சென்னை – புதுச்சேரி, பெங்களூரு – திருப்பதி, இந்தூர் – போபால், ஹைதராபாத் – விஜயவாடா உட்பட 10க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த இலவச சேவை சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
