இந்தியாவில் பல்வேறு நகரங்களில் பணியாற்றியுள்ள வடமாநிலத் தொழிலாளர்களும், அண்டை மாநிலத்தைச் சேர்ந்த பலரும் சென்னையில் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவருமே, இந்தியாவின் மற்ற நகரங்களை விட, சென்னையில்தான் மிகவும் பாதுகாப்பாக உணர்வதாக கூறுவதுண்டு.
அதை தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கை உறுதி செய்துள்ள நிலையில், தற்போது உலகளாவிய Safety index என்ற கணக்கீடும் உறுதிப்படுத்தியுள்ளது.. இதற்கு அடுத்த இடத்தில்தான், இந்தியாவின் பிற மெட்ரோ நகரங்களான மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

