Home உலகம் AC இல்லாமலே குளிர்ச்சி… சீனாவின் Rooftop Mist Cooling வைரல்!

AC இல்லாமலே குளிர்ச்சி… சீனாவின் Rooftop Mist Cooling வைரல்!

சீனாவின் ஷான்சி (Shanxi) மாகாணத்தில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில், கோடை வெப்பத்தைத் தணிப்பதற்காக ‘ரூஃப்டாப் மிஸ்ட்-கூலிங்’ (Rooftop mist-cooling system) எனப்படும் கூரைப்பகுதியில் பனிமூட்டம் போன்ற நீர்த்துளிகளைத் தெளிக்கும் புதிய தொழில்நுட்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நவீன அமைப்பானது, இயக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்தப் பகுதியின் மேற்பரப்பு வெப்பநிலையை 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை சட்டென்று குறைத்து விடுகிறது. தகிக்கும் கோடை வெயிலைச் சமாளிக்கவும், குளிர்சாதன வசதிகளுக்கான மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்கவும் சீனர்கள் கையாண்டுள்ள இந்த அதிநவீனக் கண்டுபிடிப்பு தற்போது உலகளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

Exit mobile version