Home உலகம் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த ஜெர்மனி! வெளிநாட்டுக் கல்வியில் இந்திய மாணவர்களின் புதிய தேர்வு!

அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த ஜெர்மனி! வெளிநாட்டுக் கல்வியில் இந்திய மாணவர்களின் புதிய தேர்வு!

இந்தியாவில் பெருநகரங்களைத் தாண்டி இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட (Tier 2 & Tier 3) நகரங்களைச் சேர்ந்த 50 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் வெளிநாட்டுக் கல்வியை நோக்கிப் படையெடுத்து வரும் நிலையில், அவர்களின் முதன்மைத் தேர்வாக அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி ஜெர்மனி முதலிடத்தைப் பிடித்துள்ளதாக அண்மைக்கால ஆய்வுகள் மற்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பாரம்பரியமாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளை நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்திய மாணவர்களின் கவனம், தற்போது கல்விக் கட்டணம் இல்லாமை அல்லது குறைவான கட்டணம், தெளிவான வேலைவாய்ப்பு மற்றும் விசா நடைமுறைகள் காரணமாக ஜெர்மனியை நோக்கி வேகமாகத் திரும்பியுள்ளது.

உயர்கல்விக்கான செலவு மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை முதன்மையாகக் கருதி முடிவெடுக்கும் கோவை, ஜெய்ப்பூர், லக்னோ, இந்தூர் போன்ற நகரங்களைச் சேர்ந்த நடுத்தரக் குடும்பத்து மாணவர்கள், கடன் சுமையின்றித் தரமான சர்வதேசக் கல்வியைப் பெற ஜெர்மனியைச் சிறந்த மாற்றுத் தேர்வாகக் கருதுவது இம்மாற்றத்திற்கு முக்கியக் காரணமாகக் பார்க்கப்படுகிறது.

Exit mobile version