Tuesday, June 16, 2026
Homeசெய்திகள்தமிழகம் முழுவதும் மின் கட்டமைப்பு மேம்பாடு: முதல்வர் விஜய் முக்கிய உத்தரவு!

தமிழகம் முழுவதும் மின் கட்டமைப்பு மேம்பாடு: முதல்வர் விஜய் முக்கிய உத்தரவு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாகத் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதாகப் பொதுமக்கள் தரப்பிலிருந்து எழுந்த புகார்களைத் தொடர்ந்தும், ஆங்காங்கே நடைபெற்ற போராட்டங்களை அடுத்தும், மாநிலத்தின் மின் உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த முதல்வர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

இதன்படி, தமிழகம் முழுவதும் மின் பழுதுகளை உடனுக்குடன் சீரமைக்கும் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்வதற்காக, காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் 15,058 மின் பணியாளர்களை முறைப்படி விரைந்து நியமிக்க அவர் ஆணையிட்டுள்ளார்.

அத்துடன், மாநிலத்தின் ஒட்டுமொத்த மின் விநியோகச் சீரமைப்பிற்காக சுமார் 15,032 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக 231 மின் துணை நிலையங்களை (Substations) அமைக்கவும், தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்யத் தேவையான மின் கம்பங்கள், டிரான்ஸ்ஃபார்மர்கள் உள்ளிட்ட மின் தளவாடப் பொருட்களை உடனடியாகக் கொள்முதல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மின் விநியோகப் பாதைகளில் திடீரென ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து சரிசெய்யும் வகையில், மின்வாரியப் பணியாளர்களைத் தொடர்ச்சியான ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தவும் முதல்வர் விஜய் அதிகாரிகளுக்குத் தீவிர உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments