Friday, June 19, 2026
Homeசெய்திகள்ஜூன் 29, 30-ல் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் மாநாடு; முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனை!

ஜூன் 29, 30-ல் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் மாநாடு; முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனை!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஐஏஎஸ் (IAS), ஐபிஎஸ் (IPS) மற்றும் ஐஎஃப்எஸ் (IFS) அதிகாரிகளின் மாநாடு நடைபெற உள்ளது.

மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அரசின் முக்கியத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து இந்த இரண்டு நாள் மாநாட்டில் விரிவாக ஆலோசிக்கப்பட இருக்கிறது.

மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், மக்கள் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும் ஏதுவாக முதலமைச்சர் இந்த மாநாட்டை கூட்டி அதிகாரிகளுக்கு நேரடியாக ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்க உள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments