தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் தனது முதல் அதிகாரப்பூர்வ விவாதத்தை மேற்கொண்டார். இந்த சந்திப்பில்் , தமிழகம் முழுவதும் உள்ள சாலைகளின் தரம், முறையான கழிவு மேலாண்மை மற்றும் தடையற்ற குடிநீர் விநியோகம் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து அவர் விரிவாகக் கேட்டறிந்தார்.
குறிப்பாக, பருவமழை காலத்திற்கு முன்னதாகவே சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கவும், குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளில் புதிய திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே இந்த அரசின் முக்கிய நோக்கம் என்பதை வலியுறுத்திய முதலமைச்சர், அடிப்படை வசதிகள் தொடர்பான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
புதிய அரசு பொறுப்பேற்ற உடனேயே நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டில் முதலமைச்சர் காட்டி வரும் இந்த வேகம், அரசு இயந்திரத்தை உற்சாகப்படுத்தியுள்ளது.
