சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சிகள் எழுப்பிய பல்வேறு விமர்சனங்களுக்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் ஜோசப் விஜய், “எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ள சில முக்கியமான விவகாரங்களை நான் மீண்டும் பரிசீலிப்பேன்” என்று உறுதியளித்தார்.
குறிப்பாக, முதல்வரின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ரத்தன் பண்டிட் நியமிக்கப்பட்டது குறித்துக் கூட்டணிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு, இது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில், அறிவியல் பூர்வமான அணுகுமுறை மற்றும் நிர்வாகத் தூய்மையைக் கருத்தில் கொண்டு, ரத்தன் பண்டிட்டின் நியமன ஆணையை ரத்து செய்ய முதல்வர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்களின் உணர்வுகளுக்கும், ஜனநாயக அமைப்புகளின் மாண்பிற்கும் மதிப்பளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

