Sunday, March 22, 2026
HomeUncategorizedகழிப்பறைகள் சுத்தமாக இல்லை- ரயில்வே வாரியம் அதிரடி உத்தரவு!

கழிப்பறைகள் சுத்தமாக இல்லை- ரயில்வே வாரியம் அதிரடி உத்தரவு!

நீண்ட தூரம் செல்லும் ரயில்களில் முறையாக கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதோடு கழிப்பறையில் உள்ள தண்ணீர் குழாய்கள் உடைந்து இருப்பது, ரயில்களில் போதிய தண்ணீர் நிரப்பாதது போன்ற காரணங்களால் கழிப்பறைகள் அசுத்தமாக இருக்கிறது. இந்நிலையில் 10 நிமிடம் அல்லது அதற்கு மேல் நிறுத்தப்படும் ரயில் நிலையங்களில் ரயிலில் உள்ள கழிப்பறைகளை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும் என்று ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. அத்தகைய நிலையங்களை தவிர கழிப்பறையை சுத்தம் செய்ய வேறு புதிய இடங்களையும் பரிந்துரைக்கலாம். இது குறித்து ரயில்வே தலைமை எந்திரவியல் பொறியாளரே முடிவு எடுக்க வேண்டும்.

அதேபோன்று ஒவ்வொரு ரயிலுக்கும் அடையாளம் காணப்பட்டு ரயில் நிலைய இடங்களில் விவரங்களை தொகுத்து 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிலையங்களில் ரயில்கள் நிற்கும்போது கழிப்பறைகளை தூய்மைப்படுத்தும் நோக்கில் சுத்தமான ரயில் நிலையம் திட்டத்தை இந்திய ரயில்வே கடந்த 2003 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. படிப்படியாக பல ரயில் நிலையங்களிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. கழிப்பறையை சுத்தமாக வைத்திருப்பது, கிருமி நாசினி தெளிப்பது, குப்பையை அகற்றுவது உள்ளிட்ட எந்திரம் மயமாக்கப்பட்ட துப்புரவு செயல்முறைகள் இதில் அடங்கும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments