தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வடமாவட்டங்களில் கணிசமான வெற்றிகளைப் பதிவு செய்திருந்தாலும், சில குறிப்பிட்ட பகுதிகளில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
குறிப்பாக, அக்கட்சியின் அரசியல் பயணத்தில் முக்கியத் தளமாகக் கருதப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தின் 7 தொகுதிகளிலும் ஒரு இடத்தைக் கூட தவெக வேட்பாளர்களால் கைப்பற்ற முடியவில்லை.
இதுதவிர அரியலூர், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தென்காசி, நீலகிரி மற்றும் திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த 33 தொகுதிகளில் அக்கட்சி முழுமையாகத் தோல்வியைத் தழுவியுள்ளது.
வடமாவட்டங்களின் சில பகுதிகளில் கட்சிக்குக் கிடைத்த வரவேற்பு, இந்த 8 மாவட்டங்களில் வாக்குகளாக மாறத் தவறியது அக்கட்சியின் தேர்தல் வரைபடத்தில் ஒரு பலவீனமான புள்ளியாகவே பார்க்கப்படுகிறது.

