Skip to main content

கோவையில் பயங்கரம்.. மாணவி பாலியல் வன்கொடுமை.. வலைவீசும் போலீஸ்!

கோவை விமான நிலையத்தின் பின்புறம், நேற்றிரவு (நவ.,02) தனது ஆண் நண்பருடன் கல்லூரி மாணவி பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 3 பேர் மாணவியை கடத்த முயற்சி செய்தனர். இதையடுத்து மாணவியின் ஆண் நண்பர், 3 பேரிடம் இருந்து காப்பாற்ற போராடி உள்ளார்.ஆனால் மாணவியின் ஆண் நண்பரை தாக்கி, மயக்கம் அடைய செய்துவிட்டு, கடத்தி சென்றனர்.

அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு, 3 பேரும் தப்பி சென்றனர். பின்னர் மாணவியின் ஆண் நண்பர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். இது தொடர்பாக, 3 பேர் மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.

7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.