Home செய்திகள் கோவையில் பயங்கரம்.. மாணவி பாலியல் வன்கொடுமை.. வலைவீசும் போலீஸ்!

கோவையில் பயங்கரம்.. மாணவி பாலியல் வன்கொடுமை.. வலைவீசும் போலீஸ்!

கோவை விமான நிலையத்தின் பின்புறம், நேற்றிரவு (நவ.,02) தனது ஆண் நண்பருடன் கல்லூரி மாணவி பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 3 பேர் மாணவியை கடத்த முயற்சி செய்தனர். இதையடுத்து மாணவியின் ஆண் நண்பர், 3 பேரிடம் இருந்து காப்பாற்ற போராடி உள்ளார்.ஆனால் மாணவியின் ஆண் நண்பரை தாக்கி, மயக்கம் அடைய செய்துவிட்டு, கடத்தி சென்றனர்.

அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு, 3 பேரும் தப்பி சென்றனர். பின்னர் மாணவியின் ஆண் நண்பர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். இது தொடர்பாக, 3 பேர் மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.

7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Exit mobile version