Home உலகம் South Pars தாக்குதலுக்கு பின் அதிரடியாக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை!

South Pars தாக்குதலுக்கு பின் அதிரடியாக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை!

உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயல்களில் ஒன்றான ஈரானின் South Pars எரிசக்தி நிலையங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலையானது 4% அதிகரித்துள்ளது.

இதன்படி, பிரெண்ட் (Brent) வகை கச்சா எண்ணெய் ஒரு பேரலின் விலை 112 அமெரிக்க டாலர்கள் வரை உயர்ந்துள்ளது. அதே போல் அமெரிக்க சந்தையிலும் கச்சா எண்ணெய் விலை 3% அதிகரித்துள்ளதுடன், ஒரு பேரல் 99.27 டாலர்களாகப் பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி காரணமாக இன்று காலை ஆசியாவின் முக்கிய பங்குச் சந்தைகள் பின்வருமாறு வீழ்ச்சியடைந்துள்ளன:

தென் கொரியா (Kospi): 3% வீழ்ச்சி.

ஜப்பான் (Nikkei 225): 2.8% வீழ்ச்சி.

ஆஸ்திரேலியா (ASX 200): 1.6% வீழ்ச்சி.

Exit mobile version