அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய 242 பயணிகளில் 241 பேர் உயிரிழந்ததாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் விமானம் போய் விழுந்த மருத்துவக் கல்லூரி விடுதியிலும் 5 மருத்துவ மாணவர்கள் உட்பட 7 பேர் பலியாகி இருக்கின்றனர்.
விமானி சொன்ன கடைசி வார்த்தைகள் பின்வருமாறு, விமானத்தில் போதிய உந்துதல் இல்லை.. (thrust இல்லை) விமானம் மேலே செல்லவில்லை, நாங்கள் உயரத்தை இழக்கிறோம் (we are losing lift).. மே டே.. மே டே என்று அந்த விமானி கூறி உள்ளார்.
விமானத்தை கேப்டன் சுமீத் சபர்வால் இயக்கினார். அவருக்கு உதவியாக கிளைவ் குண்டர் என்ற முதல் நிலை விமானி இருந்தார். கேப்டன் சுமீத் சபர்வாலுக்கு 8200 மணி நேரத்திற்கும் அதிகமான விமான அனுபவம் உள்ளது. மேலும், துணை விமானி கிளைவ் குண்டருக்கு 1100 மணி நேர விமான அனுபவம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விமானம் அகமதாபாத்தில் இருந்து இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் 1:39 மணிக்கு (UTC 08:09) ஓடுபாதை 23-ல் இருந்து புறப்பட்டதாக விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் (ATC) தெரிவித்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏடிசிக்கு “மேடே” அழைப்பு விடுத்தது. சரியாக விமானம் புறப்பட்ட 90வது நொடியில் .. அதாவது டேக் ஆப் செய்து விமானம் புறப்பட்ட பின் 90வது நொடியில் MayDay கால் வந்துள்ளது.

விபத்தில் சிக்கிய 242 பயணிகளில் 241 பேர் உயிரிழந்ததாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த பரிதாபம் ராஜஸ்தான் பன்ஸ்வாராவைச் சேர்ந்த டாக்டர் கோனி வியாஸ், தனது கணவர் பிரதீப் ஜோஷி மற்றும் 3 குழந்தைகளுடன் லண்டனுக்கு குடிபெயரவிருந்தார். விமான விபத்தில் அனைவரும் உயிரிழந்தனர்.
அதுமட்டும் இல்லாமல் கேரள நர்ஸ் உயிரிழந்துள்ளார். கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த நர்ஸ் ரெஞ்சிதா நாயர் உயிரிழப்பு; லண்டனில் நர்ஸ் வேலை கிடைத்ததால் அங்கு செல்ல, ஆமதாபாத்தில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் பயணித்துள்ளார். ரெஞ்சிதாவுக்கு 7 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் உள்ளனர்.
விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருடன் அரசு துணை நிற்கும் என்றும் விடுதி கட்டடம் இடிந்ததில் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. DNA பரிசோதனைக்குப் பிறகே உயிரிழப்பு எண்ணிக்கை தெரியவரும் எனவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி அளித்துள்ளார்.
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவிப்பு காயம் அடைத்தவர்களின் மருத்துவ செலவை டாடா நிறுவனம் ஏற்றுள்ளது. சேதமடைந்த விடுதி கட்டிடம் புதுப்பிக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.