நடிகை ராஷ்மிகா மந்தனா தனுஷின் ‘டி51’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிக்கிறார் தனுஷ். தலைப்பிடப்படாத இப்படம் ‘டி51’ என அழைக்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் என படக்குழு அறிவித்துள்ளது.
