இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான ஹெச்டிஎஃப் பேங்க் தனது வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வருகிற ஜூன் 8ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை டிஜிட்டல் சார்ந்த சேவைகள் குறிப்பிட்ட நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்காது.
அதாவது, அதிகாலை 2.30 மணி முதல் காலை 6.39 மணி வரை இந்த தடை காலம் இருக்கும். அந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் சார்ந்து எந்த சேவையையும் பயன்படுத்த முடியாது.
