90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் இயக்குனர்களில் ஒருவரான ஏ ஆர் முருகதாஸ் முன்னணி இயக்குநர்கள் ஒருவராக வளம் வந்து கொண்டிருந்தார். ஆனால் சமீப காலமாக அவரது திரைப்படங்கள் ஏதும் சரியாக போகவில்லை. தற்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராசி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.
இயக்குனர் சங்கர், மணிரத்தினம் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்கள் அனைத்தும் தொடர்ந்து தோல்வி அடைந்து வரும் சமயத்தில் முருகதாஸின் திரைப்படம் சினிமா ரசிகர்களுக்கு ஆறுதலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஏ ஆர் முருகதாஸின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி உள்ளது. ஒரு விழாவில் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டார் முருகதாஸ். அப்போது ரெட்ரோ படத்தில் இடம்பெற்ற கன்னிமா பாடல் ஒலிக்கப்பட்டது. அதனை கேட்டு வைபான முருகதாஸும் அவரது குடும்பத்தினரும் சூப்பராக நடனம் ஆடினார்கள். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் யப்பா செம ஆட்டம் போடுறாரே. ஏ.ஆர்.முருகதாஸ் பயங்கர குஷியில் இருக்கிறார் என்று கமெண்ட்ஸ் செய்து அதிகம் ஷேர் செய்துவருகிறார்கள்.
