கல்லூரியில் படிக்கும் பொழுது அந்த வயது பருவத்தினால் மாணவர்கள் காதல் வயப்படுவது சாதாரண விஷயம்தான். ஆனால் சிலர் அதில் சுதாரித்துக் கொள்வார்கள். உண்மையான காதல், பொய்யான காதல் என்ன என்பதை பாகுபாடு அறிந்து சுதாரித்துக் கொள்ளும் பல பேர் இங்கு பிழைத்துக் கொள்கிறார்கள். ஆனால் சிலரோ தான் எடுக்க முடிவு எப்பொழுதும் நியாயமாகவும், நேர்மையாகவும் இருக்கும் என்று நினைத்து பொய்யான காதலை நம்பி விடுகின்றனர்.இது ஆண் ,பெண் என இருவருக்கும் பொருந்தும். அதன் பின்விளைவு அப்போது தெரிவதில்லை. பல வருடங்கள் கழித்து தவறு செய்து விட்டோமோ என்று அவர்கள் வாழ்க்கையே நரகமாக்கி விடுகின்றது. இது போல் பல சம்பவங்களை நாம் தினம் தினம் பார்க்கிறோம். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் தற்போது சென்னை மதுரவாயலில் நடந்துள்ளது.
சென்னை மதுரவாயலில் உள்ள பிரபல கல்லூரியில் பயிலும் மாணவி அதே கல்லூரியில் பயிலும் மாணவனை காதலித்து வந்துள்ளார். கார் வாங்க வேண்டும் என்று காதலன் கூறியதற்காக வீட்டில் இருந்த 20 லட்சத்தை யாருக்கும் தெரியாமல் திருடி கொண்டு சென்று கார் வாங்கிக் கொடுத்துள்ளார்.
கார் வாங்கிய காதலன் எஸ்கேப் ஆனதாகவும் கூறப்படுகின்றது. வீட்டிற்கு உண்மை தெரிந்த உடன் தன் தந்தையுடன் சேர்ந்து அந்த மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவர்களின் புகாரின் பெயரில் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
