Home Uncategorized அகத்திக்கீரை பிடிக்காதா? அப்போ இந்த தகவல் உங்களுக்கு தான்!

அகத்திக்கீரை பிடிக்காதா? அப்போ இந்த தகவல் உங்களுக்கு தான்!

நாம் தினமும் உணவில் பயன்படுத்தும் பல உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்களை அறிந்து கொண்டால், அவற்றை நாம் சிறப்பாக பயன்படுத்தி முழு உடல் ஆரோக்கியத்தை பெறலாம். உணவு சம்பந்தமான பல அறியாமைகள் இன்றும் நம்மிடம் உள்ளன. இந்த பதிவில் நாம் ஒரு அற்புதமான மருத்துவ குணம் கொண்ட கீரையை பற்றி காணப் போகிறோம். 

பொதுவாக பலர் சமையலில் கீரையை பயன்படுத்தினாலும், அகத்தி கீரையை மட்டும் ஒதுக்கி வைப்பார்கள். ஏனெனில் அகத்திக்கீரை உண்டால் பலவிதமான ஒவ்வாமைகள் உயிருக்கே பாதிப்பு தரும் என்று சில தவறான தகவல்கள் அவர்களின் மனதில் பதிந்துள்ளன. இதனால் அகத்திக்கீரையின் அற்புதமான மருத்துவ குணங்களை நாம் பெறுவதை தவிர்க்கிறோம்.

 எந்த உணவையும் முறையாக பயன்படுத்தினால், அதில் உள்ள மருத்துவ குணங்களை நன்கு உடல் உறிஞ்சி, நமக்கு தேவையான சக்திகளை கொடுத்து முழு ஆரோக்கியத்தையும் தரும். இந்த வகையில் எளிய முறையில் கிடைக்கும் கீரையில் நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் எதிர்பாற்றல்களையும் பெறலாம்.

அகத்திக் கீரையில் உள்ள சத்துக்கள்:

இந்த கீரையில் விட்டமின் பி சத்துக்கள் மிக அதிகமாக உள்ளன, முக்கியமாக தயார் இன் ரிப்போர்ட் 16 போன்ற அமினோ அமிலங்கள் நிறைந்த புரதச்சத்து அதிகம் உள்ளது. இது தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்ற நோய்கள் வராமல் நம்மை காக்கும்.
இந்த கீரையில் இரும்பு சத்து, மெக்னீசியன், பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளதால், ரத்த ஓட்டத்தை சீராக்கி, உடலில் நல்ல கொழுப்பு அளவுகளை சரியாக மெயின்டைன் செய்து, உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை கொடுத்து, ரத்த சோகை வராமல் நம்மை பாதுகாக்கும்.
இந்த கீரையில் தயமின் சத்து அதிகமாக உள்ளது, இது மூளைக்கு தேவையான நுண்ணூட்டச் சத்துக்களை தந்து, மறதி நோய் வராமல் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

 மன அழுத்தத்தை நீக்கும் கீரைகள்

இந்த கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்ப்பதால், உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களின் தொந்தரவுகளையும் உபாதைகளையும் குறைக்க முடியும். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் உடல் சோர்வு, நடுக்கம், பசியின்மை, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளை கொண்டவர்கள் இந்த கீரையை உணவில் சேர்த்தால், அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, உடலில் நல்ல மாற்றத்தை உணரலாம். இதனால் அவர்கள் ஆரோக்கியமாக இருந்து, மன அழுத்தத்தை விரைவில் மறக்க முடியும்.
அஜீரணம், அல்சர், மூலநோய் போன்ற தினசரி நோய்களை இந்த கீரை தடுத்து, நிம்மதியான வாழ்க்கையை அளிக்கும். இதனால் பலவிதமான மன அழுத்தங்களும் நீங்கும்.

உண்ண கூடாதவர்கள்

மதுப்பழக்கம் உள்ளவர்களும், அசைவ உணவு பிரியர்களும் இந்த கீரையை உண்ண வேண்டாம். ஏனெனில் அசைவ உணவுடன் இந்த கீரையை உண்டால் இதய கோளாறு மற்றும் மாறுபடைப்பு ஏற்படலாம், இது உயிருக்கு கேடு விளைவிக்கும்.

Agathi keerai poriyal

 

அகத்திக்கீரை பொரியல் செய்முறை

அகத்திக்கீரையை நன்றாக கழுவி நறுக்கி, கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பெருங்காயம் சேர்த்து, நறுக்கிய கீரையையும் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கிய பின், தண்ணீர் சேர்த்து, தேவையான உப்பையும் சேர்த்து வேக விடவும். இறக்கும் பொழுது துருவிய தேங்காயை சேர்த்து இறக்கவும். இந்த சுவையான மற்றும் சத்தான அகத்திக்கீரை பொரியலை வாரம் ஒருமுறை உண்டு வந்தால், உடலுக்கு தேவையான சக்திகளை அளித்து ஆரோக்கியம் பெறலாம்..

Exit mobile version