நமக்கு இயற்கை எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு மரத்தின் இலை தான் வேப்ப இலை இது கசப்பு சுவை கொண்டது. ஒரு மனிதனுக்கு வாழ்வில் ஏற்படக்கூடிய சிறிய நோய் முதல் பெரிய நோய் வரை உள்ள அனைத்துக்கும் ஒரே மருந்தாக இந்த வேப்ப இலையை பயன்படுத்தலாம். நம் முன்னோர்கள் இந்த வேப்ப மரத்தை உயிர்காக்கும் மரமாக கருதி வழிபட்டு வந்தனர்.
வேப்ப இலை டீ
பத்து வேப்பிலைகளை இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி வெதுவெதுப்பாக குடித்து வந்தால் சர்க்கரை நோய் மட்டுப்படும். உடலைக்கு நல்ல ரத்த ஓட்டத்தை அதிகரித்து உடல் உறுப்புக்கள் ஆரோக்கியம் பெரும். இந்த டீயை குடித்து வந்தால் பலவிதமான நோய் தொற்றுகளும் நோய் பாதிப்புகளும் விரைவில் சரியாகும். இதில் மிக அதிகமாக ஆன்ட்டி மைக்ரோபியல் ப்ராபர்ட்டி, ஆன்ட்டி ஆக்சிடென்ட் ப்ராப்பர்ட்டி, ஆன்டி கேன்சர் பிராபர்ட்டி என்று பல நன்மை தரக்கூடிய மருத்துவ குணங்கள் கொண்டது வேப்ப இலை டீ.
உடல் உறுப்பு செயல்திறனை அதிகரிக்கும்
1. பல ஆராய்ச்சி ஆய்வுகள் வேப்ப இலையில் மிக சிறந்த வேதிப்பொருட்கள் உள்ளனர். மூளை செயல்பாட்டிற்கும் உதவியாக உள்ளது இதனால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
2. இதய நோய் வராமல் தடுக்கும் உயர் ரத்த அழுத்தத்தை கண்ட்ரோல் செய்யும்.
மூட்டு வலி சரியாக
இதில் ஆன்டி இன்ஃப்ளமேட்டரி பிராபர்ட்டி உள்ளதால் மூட்டுகளில் ஏற்படும் வலி வீக்கம் அனைத்தையும் சரி செய்யும் அதற்கு வேப்ப இலையும் ஒரு கைப்பிடி அளவு முடக்கத்தான் இலையும் நன்றாக அரைத்து பாதிப்பு உள்ள இடத்தில் அப்ளை செய்து பற்று போடவும். காய்ந்ததும் நன்றாக கழுவி விடவும் இவ்வாறு செய்தால் மூட்டுகளில் ஏற்படும் வலி வீக்கம் அனைத்தும் குணமாகும்.
சர்ம பாதுகாப்பு
வேப்ப இலையுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் முகப்பருவு போன்ற பிரச்சனைகள் சீக்கிரம் குணமாகும் சரும சுருக்கம் வராமல் முகம் பொலிவு பெறும்.
பூச்சிக்கொல்லி
குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றுவதற்கு இந்த இலையை நன்றாக அரைத்து கொதிக்க வைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றில் உள்ள அனைத்து பூச்சிகளும் வெளியேறும்.
புண்களை குணமாக்கும்
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பாதத்தில் ஏற்படும் குழி புண்ணை ஆற்றுவதற்கு வேப்ப என்னையை தடவி வர புண் குணமாகும்.
வெண்புள்ளி நோய்
தோள்களில் ஏற்படும் வெண்புள்ளி நோய் குணமாக வேப்ப இலையை மஞ்சளுடன் நன்றாக அரைத்து அதை பாதிக்கப்பட்ட இடத்தில் அப்ளை செய்து நன்றாக 40 நிமிடம் ஊற வைக்கவும். பின்பு கழிவு விடவும். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் வெண்புள்ளி நோய் குணமாகும்.அம்மை நோய்களின் தாக்கத்தை முற்றிலும் குணப்படுத்தும் .
வாய் துர்நாற்றம் நீங்க
வேப்ப இலையை நன்றாக அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணியை வாய் கொப்பளித்து வந்தால்
வாயில் உள்ள துர்நாற்றம் நாளடைவில் குணமாகும். இந்த தண்ணீரைக் கொண்டு தலையில் உள்ள முடிகளை அலசி வந்தால் பொடுகு தொல்லை பேன் தொல்லை போன்றவை நீங்கும்.
நம் முன்னோர்கள் பயன்படுத்திய முதல் மருந்தாக இன்றளவும் பயன்படுத்தக்கூடிய இந்த வேப்ப இலையை மருந்துகளை நாம் முறையாக பயன்படுத்தி நம் உடலுக்கு தேவையான மருத்துவ குணங்களை பெற்றுக்கொண்டு இன்புற்று வாழலாம்.
