Home Uncategorized மாதுளை பழத்தோலை தூக்கிபோடுறீங்களா? உடம்புக்கு எவ்ளோ நல்லதுன்னு தெரியுமா? இனிமே அப்படி செய்யாதீங்க..

மாதுளை பழத்தோலை தூக்கிபோடுறீங்களா? உடம்புக்கு எவ்ளோ நல்லதுன்னு தெரியுமா? இனிமே அப்படி செய்யாதீங்க..

மாதுளை பழத்தை விட அதில் உள்ள தோலில் தான் அதிக சத்துக்களும் நுண்ணூட்ட சத்துக்களும் உண்டு.  பொதுவாக மாதுளை பழத்தை உண்டு விட்டு அதன் தோலை தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால் அந்தத் தோலில் உள்ள மருத்துவ குணத்தை பற்றி தெரிந்தால் தூக்கி எறிய மாட்டார்கள்.பல நன்மைகளைத் தரும் மாதுளை தோலின் மருத்துவ குணத்தை பற்றி காண்போம் 

 மாதுளை தோலில் உயர்தர ஆன்டி-ஆக்சிடன்ட், இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம் என பல நன்மை தரக்கூடிய வேதிப்பொருட்கள் உள்ளடங்கியுள்ளது.

 குணமாகும் நோய்கள் 

 இதில் மிக சக்தி வாய்ந்த வேதிப்பொருட்கள் புற்று நோய்கள் வராமல் தடுக்கும்( பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல், மார்பக புற்றுநோய் ஆண்களுக்கு புரோஸ்டேட்,  புற்றுநோய் லங்க் கேன்சர் வராமல் பாதுகாக்கும்.)

 எந்த ஒரு நோயும் வராமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக மாதுளை பழ தோலை டீயாகவோ கசாயமாகவோ,பொடியாகவோ சேர்த்துக் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

 பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் அனைத்தும் குறைக்கும். மாதவிடாய் நிற்கும் நிலையில் இருக்கும் பெண்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.  ரத்தக்குழாயில் உள்ள கொழுப்புக்களையும் உடல் உறுப்புக்களில் உள்ள கொழுப்புகளையும் கரைத்து நல்ல ஆரோக்கியமான ரத்த ஓட்டத்தையும் உள் உறுப்புகளின் திறன்களையும் அதிகரிக்கும். இதிலுள்ள விட்டமின் சி , வாய் பல் இரு பிரச்சனைகள் வராமல் தடுக்கும். இதய நோய்கள் வராமல் தடுக்கும், நீரிழிவு நோய்க்கும் ரத்த அழுத்தத்துக்கும்  இது சிறந்த மருந்து. எலும்புகளை வலுப்படுத்தி மூட்டு தேய்மானத்தை சரி செய்யும். ஒளிவான மினுமினுக்கும் தோல் அழகை தரும்.

 ஃபேஸ் பேக் 

 இந்தத் தோலை வெயிலில் காய வைத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து அப்ளை செய்து 30 நிமிடம் கழித்து கழுவவும் முகம் பொலிவு பெறும், கரும்புள்ளிகள் அன்ஈவென் ஸ்கின் டோன்(uneven skin tone )  முகப்பரு, அனைத்தும் சரி செய்யும்.

 மாதுளை பழ தோல் டீ :

 நன்கு கழுவி பொடி செய்த தோலை இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதில் கால் டீஸ்பூன் மஞ்சளும், ஏலக்காய் பொடியும் சேர்த்து ஒரு டம்ளர் ஆகும் வரை கொதிக்க வைக்கவும். இதில் சிறிது பணங்கற்கண்டு அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து டீ போல் குடிக்கவும். இதைக் குடித்தால் எந்த விதமான புற்றுநோயும் வராமல் காத்துக் கொள்ளலாம்.

 இதில் அதிகப்படியான ஆன்ட்டி இன்ஃப்ளமேடு பிராப்பர்ட்டி உள்ளதால், நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும். இதன் உள் வேதிப்பொருட்கள்கேன்சர் செல்களை வளராமல் தடுக்கும். உயர் ரத்தம் அழுத்தம் உடையவர்கள்  சர்க்கரை நோய் நோயாளிகள், இதைத்தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல உடல் ஆரோக்கியத்தை பெறலாம். எலும்புகளின் அடர்த்தி அதிகமாகி எலும்பு தேய்மானத்தை குறைக்கும். இத்தனை மகத்துவமான மாதுளை தோலை பயன்படுத்தி எந்தவிதம் நோய்களும் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

Exit mobile version