நமது முன்னோர்களின் வாழ்க்கை முறையை விட இன்றைய காலத்தில் நமது வாழ்க்கை முறை பெரிய மாற்றங்களைச் சந்தித்துள்ளது. நோய்கள் நம் உடலில் நிலைத்துவிட்டன, இவை ஒருவரின் வாழ்க்கை சுழற்சியை பெரிய பாதிப்புகளுடன் மாற்றிவிடும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சில உணவுகளை தினசரி வாழ்க்கையில் உட்கொண்டு வந்தால், அந்த நோய் பாதிப்புகளிலிருந்து தங்களை பாதுகாக்க முடியும்.
பச்சை காய்கறிகள்
கீரை வகைகள் உடலுக்கு நல்லது, குறிப்பாக முருங்கைக் கீரை ரத்த அழுத்தத்திற்கு மிகவும் சிறந்தது. காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்க்க வேண்டும், இவை ரத்தக் குழாய்களில் உள்ள கொழுப்புகளை நீக்கும்.
சாப்பிட கூடாத உணவுகள்
அதிக உப்பு கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். ஊறுகாய், அப்பளம், சிப்ஸ், கருவாடு, எண்ணெயில் பொரித்த பலகாரங்கள், அதிக கொழுப்பு கொண்ட உணவுகள், ஆட்டுக்கறி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
சர்க்கரை வள்ளி கிழங்கு, கீரை வகைகள், பூண்டு, கற்றாழை ஜூஸ், மாதுளை தோல் சாறு போன்றவற்றை அடிக்கடி உண்டு வந்தால், உயர் ரத்த அழுத்தம் தடுக்கப்படும் மற்றும் அதன் அறிகுறிகள் குறையும்.
பழ வகைகள்
கொய்யா, பப்பாளி, அத்தி, மாதுளை, எலந்தை, பச்சை வாழை, கமலா, தர்பூசணி, விளாம்பழம், கிர்ணி பழங்கள் உட்கொள்ளலாம்.
நல்ல கொழுப்பு சத்துக்களை தரும் விதைகள்
ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து பாதாம் பருப்புகளை ஊற வைத்து உண்டு கொள்ளலாம். ஐந்து வால்நட், 20 கிராம் முந்திரி, நான்கு ஸ்பூன் உடைத்த கடலை, நான்கு ஸ்பூன் வேகவைத்த வேர்க்கடலை உண்டு கொள்ளலாம்.
உணவில் எண்ணெய் அளவை குறைத்து உபயோகிக்க வேண்டும், ஒரு நாளைக்கு இரண்டு ஸ்பூன் எண்ணெய் போதுமானது.
செம்பருத்தி டீ உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். செம்பருத்தி பூக்களின் இதழ்களை சேகரித்து, நிழலில் உலர்த்தி, சிறிது காய்ந்த பின், அவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து டீ போல் அருந்த வேண்டும். இது உடலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என பல ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் அடிக்கடி தலைவலி, உடல் சோர்வு, வாந்தி, மயக்கம், கண்பார்வை மங்கல், மற்றும் இதயத்துடிப்பில் கோளாறு ஆகியவையாகும்.
உயர் ரத்த அழுத்தத்திலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு, உடல் எடையை குறைக்கவும், குறைந்த உப்பு கொண்ட உணவுகளை உட்கொள்ளவும், நீச்சல் போன்ற உடற்பயிற்சிகளை செய்யவும், மது அருந்துவதை தவிர்க்கவும் வேண்டும். இவ்வாறான நன்மைகள் தரும் வாழ்வியல் மாற்றங்களை நாம் நம் வாழ்வில் கடைபிடித்து வந்தால், உயர் ரத்த அழுத்தம் பாதிப்புகள் வராமல் நம்மை பாதுகாக்க முடியும்.

