Home Uncategorized காலைல பாத்ரூம் போக முடியாம கஷ்டப்படுறீங்களா? அப்போ இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!

காலைல பாத்ரூம் போக முடியாம கஷ்டப்படுறீங்களா? அப்போ இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!

நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த பல மருத்துவ குணம் கொண்ட உணவுப் பொருட்களில் ஒன்றுதான் விளக்கெண்ணெய். விளக்கெண்ணெய் ஒரு அற்புதமான தாவரத்தில் இருந்து நாம் பெறுகின்றோம். ஆமணக்கு என்று சொல்லக்கூடிய ஒரு விதமான மரச் செடியில் இருந்து காய்க்கக்கூடிய விதைகளில் இருந்து வரக்கூடியது தான் விளக்கெண்ணெய். இயற்கையாக பெறக்கூடிய மருத்துவ குணம் நிறைந்த இந்த விளக்கெண்ணையை நாம் மருந்தாக பயன்படுத்துவது எப்படி என்று பதிவில் பார்ப்போம்.

விளக்கெண்ணெய் மருத்துவம்

விளக்கெண்ணெய் உடலுக்கு உள்ளே அல்லது வெளியே மருந்தாகவும் பயன்படுத்தலாம். இந்த எண்ணெயை 15 முதல் 30 மில்லி வரை சூடான நீரில் அல்லது பாலில் கலந்து காலை வெறும் வயிற்றில் மாதம் மூன்று முறை, பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிக்க வேண்டும். இதன் நன்மைகள் என்ன?

1. உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, மலச்சிக்கல் முற்றிலும் குணமாகும்.
2. கல்லீரல் நோய் மற்றும் கல்லீரலை தாக்கும் பாதிப்புகள் குணமாகும்.
3. மூட்டு வலி, வீக்கம், மூட்டு தேய்மானம், முடக்கு வாத நோய்கள் குணமாகும்.
4. உடலின் அனைத்து உறுப்புகளின் திறனை அதிகரித்து, பல்வேறு நோய்கள் மற்றும் அறிகுறிகள் தடுக்கப்படும்.

 வெளிப்பூச்சி எண்ணெய் பயன்பாடுகள்:

1. அடர்த்தியான புருவங்களைப் பெற இரவில் விளக்கெண்ணெயை புருவங்களில் தடவி நன்கு மசாஜ் செய்யவும். ஒரு மாதம் தொடர்ந்து இதைச் செய்தால், புருவங்கள் அடர்த்தியாக வளரும்.

2. கண்களுக்கு அடியில் கருவளையம் உள்ளவர்கள் இந்த எண்ணெயை முகத்தில் தடவி பயன்பெறலாம்.

3. தினசரி இரவில் தொப்புளில் விளக்கெண்ணெய் தடவுவதால் உடல் உஷ்ணத்தைக் குறைத்து, நல்ல ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி ஆரோக்கியம் பெறலாம்.

தலைமுடி ஆரோக்கியத்திற்கு:

1. ஆரோக்கியமான தலைமுடி பெற விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை சம அளவில் கலந்து, தலையில் வேர்க்கால்களில் தடவி மசாஜ் செய்யவும். இது முடிக்கு அவசியமான ஊட்டச்சத்துகளை அளித்து, முடி ஆரோக்கியமாக வளர உதவும்.

2. நாள்பட்ட ஆறாத புண்களுக்கு இந்த கலவையை தடவி வர, புண் விரைவில் குணமாகும்.

3. சொரியாசிஸ் போன்ற தோல் நோய்களுக்கு இந்த எண்ணெயை தடவி வர, இயற்கையகவே அரிப்புகுறையும்.

பல மருத்துவ குணம் கொண்ட விளக்கெண்ணையை நம் முன்னோர்கள் பயன்படுத்தியவாறு நாமும் முறையாக பயன்படுத்தி பலவிதமான ஆரோக்கியங்களை பெறுவோம்.

Exit mobile version