Home Uncategorized மணத்தக்காளி கீரையின் அற்புத குணங்களை பற்றி உங்களுக்கு தெரியுமா?

மணத்தக்காளி கீரையின் அற்புத குணங்களை பற்றி உங்களுக்கு தெரியுமா?

கீரை உணவுகளை உட்கொள்ளும் பொழுது பலவிதமான நன்மைகளை நம் உடல் பெற்றுக் கொள்ளும். அந்த வகையில் மணத்தக்காளி கீரையை எடுத்துக் கொண்டால் வாய் மற்றும் வயிற்றில் உள்ள புண்களை  முற்றிலும் குணமாக்கும். நம் வீட்டு வைத்திய முறைகளில் வாய்ப்புண் இருப்பவர்கள்,  பச்சையாகவே இரண்டு முதல் ஐந்து மணத்தக்காளி கீரையை  மென்று சாப்பிட்டு வருவார்கள். இதனால் அவர்கள் எளிதில் நோயிலிருந்து விடுபடுவார்கள்.

 மணத்தக்காளி கீரையின் மருத்துவம்.

 வயிற்றில் இருக்கும் புண்ணின் அறிகுறியே வாயிலும் இருக்கும் புண், இதனால் நோய் பாதிப்புகள் அதிகமாகவே இருக்கும். வாய் துர்நாற்றம், நாக்கு, உதடு பகுதியில் புண் ஏற்பட்டால்,  ஒருவரால்  சரிவர உணவு உட்கொள்ள முடியாது. இதனால் பலவிதமான ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு அவர்களுக்கு நோய் பாதிப்பு அதிகரிக்கும்.

 மணத்தக்காளி கீரையில் உள்ள கெமிக்கல் நியூட்ரியன்ட்கள், பைட்டோ கெமிக்கல்ஸ், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் பைட்டோ நியூட்ரியன்ட்கள் இவை அனைத்துமே நம் உடலில் பலவிதமான நோய்களிலிருந்து பாதுகாக்கும். ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். உடல் உறுப்புக்கள் சிறப்பாக செயல்பட துணையாக இருக்கும்.

 

 மணத்தக்காளி கீரை சூப்

 மணத்தக்காளி கீரையை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம்,  பூண்டு சேர்த்து தாளிக்கவும், பின்பு கீரையை கொட்டி வதக்கவும். கீரை நன்றாக வதங்கியதும் வேகவைத்த பச்சைப் பருப்பை சிறிது சேர்க்கவும். நன்றாக கொதித்த பின் சிறிது உப்பு சேர்த்து தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கவும். இந்த சூப்பை அல்சர் நோய் உள்ளவர்கள் தினமும் குடித்து வந்தால் அவர்களின் நோய் பாதிப்பு குறைந்து அதிவிரைவில் குணமடைவார்கள். சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உள்ளவர்களுக்கு இந்தக் கீரை ஒரு அற்புதமான உணவு.

சிறுநீரகம் சார்ந்த நோய்களை குணமாக்கும் சிறுநீரக கல்லை கரைத்து சிறுநீரக ஆரோகத்தை மேம்படுத்தும். கல்லீரல், நுரையீரல் ஜீரண மண்டலம், நரம்பு மண்டலம் அனைத்தையும் மேம்படுத்தி உடலின் செயல்திறனை சீராக வைத்திருக்க இந்த கீரை உதவியாக இருக்கும். உடலில் வலி வீக்கம் போன்ற நோய் அறிகுறிகளை குறைக்கவும் உதவும்.

Exit mobile version