Home செய்திகள் மது குடிப்பதை கண்டித்த தாய்.. அண்ணன், தம்பி எடுத்த விபரீத முடிவு.. ஷாக்!

மது குடிப்பதை கண்டித்த தாய்.. அண்ணன், தம்பி எடுத்த விபரீத முடிவு.. ஷாக்!

மது குடிப்பதை தாய் கண்டித்ததால் அண்ணன், தம்பி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளுவர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கம்மவார் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி(49). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் விக்னேஷ் (28), இளைய மகன் கணேஷ் (24). இருவரும் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தனர். அப்போது அங்கு பணிபுரியும் பெண்ணை காதலித்து வந்ததாகவும் தெரிகின்றது. இது குறித்து தாயார் ஜெயலட்சுமிக்கு தெரிய வர கணேஷை கண்டித்துள்ளார்.

கணேஷின் காதல் விவகாரத்தால் வீட்டில் அடிக்கடி சின்ன சின்ன தகராறுகள் வந்துள்ளது. நேற்று முன்தினம் விக்னேஷ் மற்றும் கணேஷ் இருவரும் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்துள்ளனர்.  காதல் பிரச்சனை ஒரு புறம் இருக்க,  அடிக்கடி குடிப்பதை தாய் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்து போன அண்ணன், தம்பி இருவரும் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தனர்.

 இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் ஜெயலட்சுமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி கணேஷ் உயிரிழந்தார். மாலையில் விக்னேஷும் உயிரிழந்தார். இது குறித்து மணவாளநகர் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர். ஒரே நேரத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மகன்களும் இறந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டும் இல்லாமல் இறந்த இரண்டு மகன்களின் உடலை பார்த்து தாய் கண்ணீர் விட்டு அழுதது பார்ப்போரை கலங்கச் செய்தது.
 

Exit mobile version